2020 ஆம் ஆண்டில் சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ் 2021 ஆண்டில் அசுர வேகம் பெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ( ஓமைக்கிரான்) என்ற பெயரில் மீண்டும் அதிவேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது.
2022ஆம் ஆண்டில் ஓமைக்கிரான் வைரஸ் சற்று குறைந்தது. உயிர் சேதமும் நோய் பாதிப்பும் குறைந்தது.
இதுவரை மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி வளாகங்கள் திறக்கப்பட்டன. மாணவர்கள் கொரோனா அச்சமின்றி பள்ளி கல்லூரி சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஓமைக்கிரான் வைரஸ் ஆக வந்து மக்களைத் துன்புறுத்தியதில் தற்போது இங்கிலாந்தில் XE என்னும் மிகக் கொடிய வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.
மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க கோரி உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இதிலென்ன ஆச்சரியமான தகவல் என்றால் ஏற்கனவே ஓமைக்கிரான் வைரஸ் நோய்த் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளி உடலில் XE virus உள்ளே செல்லும்போது மீண்டும் உருமாற்றம் அடையும் என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த வைரஸ் ஆனது ஓமைக்கிரான் விட அதி வேகமாக பரவும் கலப்பின திரிபு என கூறலாம்.
